திருச்சியில் ‘நீட்’ தேர்வை 9 ஆயிரத்து 56 பேர் எழுதினர் கடும் கட்டுப்பாடுகளால் மாணவிகள் அவதி
திருச்சியில் ‘நீட்‘ தேர்வை 9 ஆயிரத்து 56 பேர் எழுதினர். கடும் கட்டுப்பாடுகளால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.
திருச்சி,
மருத்துவ படிப்புக்கான ‘நீட்‘ நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. திருச்சியில் 12 மையங்களில் ‘நீட்‘ தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 9 ஆயிரத்து 420 பேருக்கு நுழைவு சீட்டு சி.பி.எஸ்.இ. மூலம் அனுப்பப்பட்டிருந்தன. ‘நீட்‘ தேர்வை எழுதுவதற்காக திருச்சி மட்டுமில்லாமல் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்வு மையங்கள் முன்பு நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினமே திருச்சி வந்து ஆங்காங்கே தங்கியிருந்தனர். விடுதியில் இடம் கிடைக்காததால் சில மாணவிகள் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கினர்.
தேர்வு மையத்தில் காலை 9.30 மணிக்கு மேல் வரும் தேர்வர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்கள் முன்பு காலை 7 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
தேர்வு மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் போலீசார் நுழைவுவாயில் முன்பு நின்று மாணவ-மாணவிகளை சோதனையிட்டு மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக அனுப்பினர். ஏற்கனவே அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பலர் தேர்வுக்கு வந்தனர். கம்மல், மூக்குத்தி, கொலுசு, சங்கிலி அணிந்து வந்த மாணவிகளை அவற்றை கழற்ற அறிவுறுத்தினர். சில மாணவிகள் தாங்களாகவே அகற்றி பெற்றோரிடம் கொடுத்தனர்.
சில மாணவிகளின் தாய்மார்கள் தங்களது மகள்கள் அணிந்திருந்த கம்மல், சங்கிலியை கழற்றி வைத்துக்கொண்டனர். மாணவிகள் தங்கள் தலை முடியில் கட்டியிருந்த ரப்பர் பேண்ட், கிளிப்புகளை அகற்றி தலைவிரிக்கோலத்துடன் நின்றனர்.
நுழைவுவாயிலில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு சோதனையிடப்பட்ட பின்பு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் சென்ற போது அவர்களை பெற்றோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மாணவிகள் தலைவிரிக்கோலத்துடன் தேர்வு மையத்திற்குள் சென்றதை பார்த்து பெற்றோர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த தேர்வுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா? அப்படி என்ன குற்றம் செய்து விடப்போகிறார்கள் எங்களது பிள்ளைகள் என ஆதங்கத்துடன் சில பெற்றோர் பேசிக்கொண்டிருந்ததை கேட்க முடிந்தது. துப்பட்டா அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் சில மாணவிகள் சுடிதாருடன் துப்பட்டா அணிந்து வந்த போது அவற்றை கழற்ற கூறினர். மாணவிகளின் நிலையை கண்டு பெற்றோர் மனம் குமுறினர். நீட் தேர்வுக்கான கடும் கட்டுப்பாடுகளால் மாணவிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல மாணவர்களுக்கும் முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவர்களும் இந்த சோதனையால் அவதிக்குள்ளாகினர். தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் சென்றதும் பெற்றோர் வெளியே காத்துக்கிடந்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. திருச்சியில் 12 மையங்களில் நடந்த ‘நீட்‘ தேர்வை மொத்தம் 9 ஆயிரத்து 56 பேர் எழுதினர். 364 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த போது மாணவ-மாணவிகளை பெற்றோர் ஆர்வமுடன் தேர்வு குறித்து கேட்டறிந்தனர். சில மாணவிகள் பெற்றோரை கட்டித்தழுவி நல்ல முறையில் எழுதியிருப்பதாக கூறினர். பெற்றோரும் மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கடும் கட்டுப்பாடுகளிடையே ‘நீட்‘ தேர்வை மாணவ-மாணவிகள் வேதனையுடன் எழுதி சென்றனர். திருச்சியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலருக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தன. அம்மாணவ-மாணவிகள் அங்கு சென்று தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story