தேர்வு மைய நுழைவு சீட்டில் குளறுபடி: ‘நீட்’ தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு
தேர்வு மைய நுழைவு சீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் சேலத்தில் நீட் தேர்வு எழுத ராசிபுரம் மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்தவர்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரில் 23 மையங்கள், புறநகரில் 3 மையங்கள் என மொத்தம் 26 மையங்களில் நேற்று ‘நீட்‘ தேர்வு நடைபெற்றது. மொத்தம் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். கடும் சோதனைகளுக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த மாணவி ஜீவிதா, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத வந்திருந்தார். அப்போது தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் அவரது தேர்வு மைய நுழைவு சீட்டை வாங்கி சரிபார்த்தனர். அதில், தேர்வு மையம் சவுடேஸ்வரி கல்லூரி என்றும், பதிவு எண் (சென்டர் கோடு) கேரள மாநிலம் கோட்டயம் என்றும் இருந்தது. இதனால் அந்த மாணவியை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஜீவிதா என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்தார்.
பிறகு மாணவி ஜீவிதா, நான் சரியாகத்தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். தேர்வு மைய நுழைவு சீட்டில் குழப்பம் ஏற்பட்டது உங்களது கவனக்குறைவு. எனவே, என்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதவில்லை என்றால் என்னுடைய மருத்துவ கனவு தகர்ந்துவிடும் என்று அங்கிருந்த அகிகாரிகளிடம் கண்ணீர்மல்க கூறினார். இருப்பினும், அந்த மாணவியை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதுபற்றி அறிந்த மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் திடீரென தேர்வு மைய கெடுபிடிகளை கண்டித்து சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவி ஜீவிதா கண்ணீருடன் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றார். அவருக்கு அங்கிருந்தவர்களின் ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story