வேலூர் கொசப்பேட்டையில் கண்காணிப்பு கேமராக்கள்


வேலூர் கொசப்பேட்டையில் கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 7 May 2018 4:32 AM IST (Updated: 7 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கொசப்பேட்டையில் கண்காணிப்பு கேமராக்களை சொந்த செலவில் பொதுமக்கள் பொருத்தினர்.

வேலூர்,

வேலூர் மாநகரில் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, குழந்தை கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தங்கசங்கிலியை பறித்து செல்கின்றனர். மேலும், குழந்தை கடத்தல் வதந்தி போன்றவற்றால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து வேலூர் கொசப்பேட்டையில் உள்ள சுபேதார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திருட்டு, வழிப்பறி, குழந்தை கடத்தலை தடுக்கும் விதமாக, தங்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 கண்காணிப்பு கேமராக்களை வாங்கி, அவற்றை தெருமுனைகளில் பொருத்தி உள்ளனர்.

இதனை நேற்று வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தொடங்கி வைத்தார். 

Next Story