கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை


கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2018 4:32 AM IST (Updated: 7 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவனந்தான் கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரது மகள் காயத்ரி (வயது 19). கல்லூரி விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

விடுமுறை தினமான நேற்று மாணவி காயத்ரி கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மாமா பிரகாஷ் இது குறித்து படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story