பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைப்பு
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம்,
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தென் மற்றும் மத்திய சென்னை பகுதியிலும் வினியோகிக்கப்படுகிறது. 1983-ம் ஆண்டு தமிழக அரசு ஆந்திர அரசுடன் தெலுங்கு கங்கை திட்டத்தை வகுத்தது. அதன்படி கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக 2 ஆயிரத்து 450 கனஅடி வீதம் தண்ணீீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிக பட்சமாக 610 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த இடைபட்ட காலத்தில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. கண்டலேறு அணையில் தண்ணீர் வரத்து காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. புழல் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் 20-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 21-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினா டிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை வெயில் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது.
அதாவது தற்போது வினாடிக்கு 260 கனஅடி தண்ணீர்தான் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 20.10 அடி நீர்மட்டம் பதிவானது. வெறும் 260 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளது.

Related Tags :
Next Story