விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை காலனி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் எங்களை ஊருக்குள் உள்ள பள்ளிக்கூடம், மளிகை கடைக்கு வரக்கூடாது என்று தடுத்து வன்கொடுமையில் ஈடுபடும் ஒரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பொதுமக்களிடம் போராட்டத்தை கைவிட்டு, கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒருவரது காதல் பிரச்சினை தொடர்பாக எங்கள் காலனிக்குள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சமுதாயத்தினர் எங்களை ஊர் தெருவில் நடக்கக்கூடாது. பள்ளிக்கும், மளிகை கடைக்கும் வரக்கூடாது என கூறி தடுத்து வன்கொடுமை செய்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் எங்களை மிரட்டி வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story