தேர்தலை ரத்து செய்யக்கோரி மாளிகைகோட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை
பெண்ணாடம் அருகே தேர்தலை ரத்து செய்யக்கோரி மாளிகைகோட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே மாளிகைகோட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் மற்றும் இயக்குனர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த மாதம் 30-ந்தேதி பல்வேறு கட்சியை சேர்ந்த 46 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் மனு பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு என எதுவும் நடைபெறவில்லை.
இதனால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் இது பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் சில கூட்டுறவு கடன் சங்கங்களில் தேர்தல் நடந்தது. ஆனால் மாளிகைகோட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டுறவு கடன் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வீராசாமி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சர்தார் பாபு, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Related Tags :
Next Story