மாட்டு வண்டி மணல் குவாரி திறக்காததை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
மாட்டு வண்டி மணல் குவாரி திறக்காததை கண்டித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு, வெள்ளாறு செல்கிறது. இந்த ஆறுகளில் தொட்டிக்குப்பம், எருமனூர், ஏனாதிமேடு, கம்மாபுரம், பவழங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதியில் மாட்டு வண்டி மணல் குவாரி இயங்கி வந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தினமும் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் பகுதியில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மணல் குவாரியை திறக்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதமாக விருத்தாசலம் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து தொழிலாளர்கள், மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் மணல் குவாரி திறக்க கோரியும், மாட்டு வண்டி மணல் குவாரி திறக்காத அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள சுவரில் கோரிக்கை மனுவை ஒட்டினர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அங்குள்ள கடைகளிலும், பாதசாரிகள், வாகன ஓட்டிகளிடமும் சென்று பிச்சையெடுக்க தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிதுநேரம் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள், விழுப்புரத்தில் உள்ள பொது பணித்துறை அதிகாரிகளிடம் பிச்சையெடுக்க செல்வதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story