ரூ.104 கோடி மின் கட்டண பாக்கியால் குடிநீரின்றி 755 கிராமத்தினர் பாதிப்பு
மின் இணைப்புக்கான ரூ.104 கோடி பாக்கி பணத்தை அரசு செலுத்தி 755 கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிடைக்கப் பெறும் நீரை ஆதாரமாக கொண்டு குடிநீர் வழங்க 2010-ம் ஆண்டு 3 குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 633 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வல்லநாடு பகுதியில் இருந்தும், 7 பேரூராட்சிகள் மற்றும் 395 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் முக்கூடலில் இருந்தும் செயல்படுத்தப்பட்டு தற்போது பயன் பாட்டில் உள்ளது.
சீவலப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட 755 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. ரூ.234 கோடி மதிப்பீட்டில் கடந்த 2010-ல் ஒப்புதல் வழங்கப்பட்டு 92 சதவீத பணிகளை முடிந்து விட்டன.
இந்்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் ஆற்றுப்படுகை அருகே ஒரு நீரேற்று நிலையம், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்க அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஆனால் மின் இணைப்பு பெறாததால் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது.
இதனால் சுமார் 6 லட்சம் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியத்திற்கு நெல்லை மாவட்டத்தில் ரூ. 69 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 32 கோடியும் மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது, இதனால் மின் இணைப்பு வழங்க மறுத்து வருவதாக தெரிய வருகிறது.
எனவே தமிழக அரசு இந்த குடிநீர் திட்டத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செலுத்தினால் மட்டுமே தென்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும. இவ்வாறு கூறினார்.

Related Tags :
Next Story