தூத்துக்குடியில், பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த லாரி 2 டிரைவர்கள் காயம்
தூத்துக்குடியில் தாறுமாறாக ஓடிய லாரி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம் தென்காசி ஆசாத் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முருகன் (வயது 29). லாரி டிரைவர். இவரும், தென்காசியை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவரான மணிகண்டராஜா (25) என்பவரும் நேற்று காலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியில் வந்தனர். லாரியை முருகன் ஓட்டி வந்தார்.
நெல்லை- தூத்துக்குடி சாலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பை தாண்டி, தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் சாலை ஓரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. மேலும் அதன் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டு வாடகைக்கு விட தயார் நிலையில் இருந்த ஒரு தனியார் கடையின் மீது மோதி நின்றது.
அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் லாரியில் இருந்த டிரைவர்கள் முருகன், மணிகண்டராஜா ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story