திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 2 பேர் முன்னெச்சரிக்கையாக கைது


திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 2 பேர் முன்னெச்சரிக்கையாக கைது
x
தினத்தந்தி 8 May 2018 3:00 AM IST (Updated: 8 May 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 2 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர், 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) பேரணியாக சென்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக ஜாக்டோ- ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான இரா.தாஸ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் டவுன் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். 

Next Story