கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் திருவிழா மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம்
கண்ணமங்கலம் அருகே கல்பட்டு கிராமத்தில் நடந்த காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காளைவிடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் வேன் மூலமும், சரக்கு ஆட்டோ மூலமும் கொண்டு வந்தனர். மொத்தம் 160 காளைகள் வந்திருந்தன. கால்நடைத் துறை டாக்டர்கள் இவற்றை பரிசோதனை செய்து களத்தில் இறங்க அனுமதித்தனர்.
இந்த நிலையில் காலை சுமார் 9.30 மணிக்கு களத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவை வீதிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஓடின. இதனை காண வீதிகளின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.33 ஆயிரத்து 333-ம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் இவை உள்பட 51 பரிசுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதனிடையே விழாவின்போது மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு டாக்டர் கார்த்திக் மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இவர்களில் படுகாயமடைந்த நீப்ளாம்பட்டு பகுதியை சேர்ந்த மணி (வயது 56), கல்பட்டை சேர்ந்த குமரவேல், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story