காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பெண்ணின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்
போச்சம்பள்ளி அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெண்ணின் வீட்டை வாலிபரின் உறவினர்கள் சூறையாடினார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் சதீஷ் (வயது 22). இவரும் சென்றாய நாயக்கனூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
அப்போது பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் சதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சதீஷ் காதலியின் வீட்டு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கபிலன் மற்றும் போலீசார் அங்கு சென்று சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சதீசின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் சதீசின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் சதீசின் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானவர்கள் ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். ஆனால் அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட சதீசும், அவர் காதலித்த பெண்ணும் இறந்து விட்டதாக கூறி அந்த பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் பதற்றம் காரணமாக கிருஷ்ணகிரியில் இருந்து அதிவிரைவுப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Related Tags :
Next Story