சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்,
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறான்விளையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவர் கடந்த 6.12.15 அன்று 8 வயது சிறுமியை ஓலைக்குடிசைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி அழுது கொண்டே இருந்தார். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி சிறுமி அழுதாள். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் விஜயகுமார் குற்றவாளி என நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், பாலியலுக்கு பலவந்தப்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் குறிப்பிட்டிருந்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 1½ ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததால், அதிகபட்சமான 10 ஆண்டுகள் தண்டனையை விஜயகுமார் அனுபவிக்க வேண்டும்.
இந்த வழக்கில் அரசு குற்றவியல் வக்கீல் ஆர்.எம்.மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

Related Tags :
Next Story