தூத்துக்குடியில் இருந்து ஆம்னி பஸ்சில் வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 32 பேர் திருச்சியில் கைது
தூத்துக்குடியில் இருந்து ஆம்னி பஸ்சில் வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 32 பேரை போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
சமயபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதிய குழுவில் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னைக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தவும், முன்னெச்சரிக்கையாக நிர்வாகிகளை கைது செய்யவும் போலீசார் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்த வகையில் திருச்சி அருகே சமயபுரம் சுங்கச்சாவடியில் சமயபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் போலீசார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட துணை செயலாளர் சத்தியபாமா தலைமையில் நிர்வாகிகள் ஒரு ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். சமயபுரம் சுங்கச்சாவடியில் ஆம்னி பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் பஸ்சில் வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 32 பேரை போலீசார் கைது செய்து சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆம்னி பஸ் டிரைவர்கள் 2 பேரையும் செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதேபோல் துறையூரில் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரனை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டதால் முக்கிய நிர்வாகிகள் பலர் தலை மறைவாகினர்.

Related Tags :
Next Story