கோபி அருகே தொலைபேசி கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
கோபி அருகே தொலைபேசி கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
கடத்தூர்,
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 24). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகாதவர். இவருடைய நண்பர் முத்துராஜ் (22).
நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்.
தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், குளிக்காமலேயே மீண்டும் சரவணம்பட்டிக்கு புறப்பட்டார்கள். வண்டியை மணிகண்டன் ஓட்டினார். முத்துராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
இறந்தார்
கோபி அருகே உள்ள இண்டியம்பாளையம் என்ற இடம் அருகே சென்றபோது, மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியது. இதில் மணிகண்டன், முத்துராஜ் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டார். முத்துராஜ் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story