கோபியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி ஜின்னிங் பேக்டரி வீதியை சேர்ந்தவர் ருக்குமணி (வயது 70). வீட்டிலேயே பலகாரம் செய்து விற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று பகல் 1.30 மணி மணி அளவில் ருக்குமணி வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். தன்னுடைய வீட்டுக்கு அருகே அவர் வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார்சைக்கிளில் தலையில் ஹெல்மெட் அணி ந்து வந்த 2 வாலிபர்கள் ருக்குமணியின் அருகே வந்து திடீரென நின்றார்கள். அப்போது வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் ருக்குமணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை வெடுக்கென பறித்தார். பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றுவிட்டார்கள்.
வலைவீச்சு
ருக்குமணி உடனே ‘திருடன் திருடன்‘ என்று கத்தினார் ஆனால் கடும் வெயில் அடித்ததால், தெருவில் ஆட்கள் நடமாடவில்லை. அதனால் ருக்குமணி அக்கம் பக்கத்தினரிடம் நடந்தவற்றை கூறினார். அவர் கள் சுற்றுவட்டாரத்தில் தேடிப்பார்த்தார்கள். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து ருக்குமணி கோபி போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, ருக்குமணியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story