கோவையில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த வெளிநாட்டு தம்பதியிடம் திருடியவர் 6 ஆண்டுகளுக்கு பின் கைது
கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தபோது வெளிநாட்டு தம்பதியிடம் திருடியவர் 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 கிராம் தங்க கட்டியை போலீசார் மீட்டனர்.
கோவை,
லண்டனை சேர்ந்த ஜோதி சந்திரமோகன் என்பவர் தனது மனைவியுடன் கடந்த 2012-ம் ஆண்டில் கோவை வந்தார். பின்னர் அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.ஏ.ஜி. பிரைடு என்ற நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அவர் தான் தங்கி இருந்த அறையை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியூர் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவர் தங்கி இருந்த அறை திறந்து கிடந்தது. அந்த அறையில் வைத்திருந்த 150 கிராம் தங்க கட்டி, பிளாட்டினம், வைர நகை ஆகியவை திருடப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 33 ஆயிரம் ஆகும். இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் போலீசார் அந்த விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் ஜோதி சந்திரமோகன் தங்கி இருந்த அறையை திறந்து திருடிவிட்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குஜராத்தை சேர்ந்த ரமேஷ் பானர்ஜி செக் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், அவர் குஜராத்தை சேர்ந்த ஜெயேஷ் ரவிஜி செய்பாலுடன் (46) சேர்ந்து ஜோதி சந்திரமோகன் தங்கி இருந்த அறையை கள்ளச்சாவி போட்டு திறந்து அங்கு வைத்திருந்த 150 கிராம் தங்க கட்டி, வைர நகை, பிளாட்டினம் ஆகியவற்றை திருடியதும், தன்னிடம் எதுவும் இல்லை என்றும், ஜெயேஷ் ரவிஜி செய்பாலிடம்தான் நகை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் ரவிஜி செய்பாலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அத்துடன் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில் ஜெயேஷ் ரவிஜி செய்பால் கைது செய்யப்பட்டார். இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் ஐதராபாத் விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் ஜெயேஷ் ரவிஜி செய்பாலை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ஜோதி சந்திரமோகனிடம் இருந்து திருடிய தங்க கட்டி, வைரம், பிளாட்டினத்தை மும்பை கொண்டு சென்றதுடன் வைரம், பிளாட்டினத்தை ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்துக்கு விற்று, மும்பையில் உள்ள தனது வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்தியதும், 150 கிராம் தங்க கட்டியை மும்பையில் விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மும்பை சென்று, ஜெயேஷ் ரவிஜி செய்பால் வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை மீட்டனர். அதுபோன்று மும்பையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் அவர் விற்பனை செய்த 150 கிராம் தங்க கட்டியும் மீட்கப்பட்டது.
வெளிநாட்டு தம்பதியிடம் திருடிய வழக்கில் குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் பெரியய்யா, குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் ஆகியோர் பாராட்டினர்.

Related Tags :
Next Story