பகிரங்க விவாதத்திற்கு தயாரா? எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால்
வளர்ச்சி குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால் விடுத்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 1-ந் தேதி பிரசாரத்தை தொடங்கி 4 நாட்கள் ஆதரவு திரட்டினார்.
அவர் சித்தராமையா மீதும், காங்கிரஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, வளர்ச்சி குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எடியூரப்பாவுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த பதிவில் கூறி இருப்பதாவது.
கர்நாடகத்தின் நலனுக்காக, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பகிரங்கமாக விவாதிக்க எடியூரப்பா தயாரா?. இவ்வாறு விவாதம் நடைபெற்றால் புதிய கர்நாடகத்தை உருவாக்குபவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்தவர் என்ற பெருமை எனக்கு உண்டு.
ஆனால் கர்நாடக வரலாற்றில் இல்லாத வகையில் முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா சிறைக்கு சென்றார். எடியூரப்பா அவர்களே இந்த விவாதத்திற்கு வாருங்கள். கர்நாடகத்தில் மோடி, அமித்ஷா, யோகிஆதித்யநாத் குழு வெப்ப காற்றை உருவாக்கி இருக்கிறது. அதை தாண்டி மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story