தங்கும் விடுதியில் 50 ஆமைகள் பறிமுதல் பீகார் வாலிபர் கைது
கல்யாண் ரெயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் 50 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்தி வந்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் கல்யாண் ரெயில் நிலையம் அருகே மகாராஷ்டிரா கெஸ்ட் ஹவுஸ் என்ற தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி அறையில் தங்கியிருக்கும் வாலிபர் ஒருவரிடம் அதிகளவில் ஆமைகள் இருப்பதாக சம்பவத்தன்று வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விடுதியின் குறிப்பிட்ட அறையில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்குள்ள பீரோவுக்குள் பிளாஸ்டிக் பைக்குள் 46 ஆமைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்த ஒரு பையில் 4 ஆமைகள் இருந்தன. அந்த ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தில்சாத் கபில் அகமது (வயது24) என்பது தெரியவந்தது.
அந்த ஆமைகளை பீகாரில் இருந்து ரெயிலில் கடத்தி வந்ததாக தெரிவித்த அவர், அவற்றை தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்ய இருந்ததாகவும் கூறினார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 3 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story