மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நடன கலைஞர் கைது
ஜூகுவில் மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நடன கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை ஜூகுவை சேர்ந்த 28 வயது மாடல் அழகி ஒருவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த நடன கலைஞர் டிங்கேஷ் சிங்(வயது 26) என்பவர் அழகியுடன் பேச முயற்சி செய்து உள்ளார்.
ஆனால் மாடல் அழகி அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டிங்கேஷ் சிங் மாடல் அழகியை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து உள்ளார்.
இருப்பினும் அந்த பெண் அவருடன் பேசாமலேயே சென்று இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிங்கேஷ் சிங் மாடல் அழகியிடம் என்னுடன் பேசாவிட்டால் ெகாலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி தனது உறவினர்களுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவர்கள் உடனே அங்கு விரைந்து வந்து, டிங்கேஷ் சிங்கை பிடித்து ஜூகு போலீசில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாடல் அழகி அவர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடன கலைஞர் டிங்கேஷ் சிங்கை கைது செய்தனர்.

Related Tags :
Next Story