பயணிகளிடம் வரவேற்பை பெறாத ஏ.சி. மின்சார ரெயில்
சேவை தொடங்கி 4 மாதத்துக்கு மேல் ஆகியும் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே பயண கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மும்பை,
மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சர்ச்கேட்- விரார் இடையே ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 8 சேவைகள் இயக்கப்படுகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கி 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பயணிகள் மத்தியில் இன்னும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
சாதாரண மின்சார ரெயில்களில் கால்வைக்க கூட முடியாத அளவுக்கு கூட்டநெரிசல் இருக்கிற நிலையில், ஏ.சி. மின்சார ரெயிலில் இருக்கைகள் கூட காலியாக கிடக்கின்றன.
இருப்பினும் கோடை காலம் தொடங்கிய பிறகு ஏ.சி. ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தனர். மார்ச் மாதத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 3 லட்சத்து 54 ஆயிரம் பேரும் பயணித்து உள்ளனர்.
இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு ஏ.சி. மின்சார ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கி இதுவரை 10 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
வரும் காலங்களில் ஏ.சி. மின்சார ரெயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். சாதாரண மின்சார ரெயிலிலும் ஏ.சி. பெட்டிகளை இணைக்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்படும்’’ என்றார்.
இதுபற்றி ரெயில் யாத்ரி பரிஷத் அமைப்பின் தலைவர் சுபாஷ் குப்தா கூறுகையில், ‘ஏ.சி. மின்சார ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வேண்டுமெனில் கூடுதல் சேவைகளை இயக்குவதுடன், பயண கட்டணத்தை குறைக்கவும் ரெயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Related Tags :
Next Story