வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க சிவசேனா திட்டம்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க சிவசேனா திட்டமிட்டு உள்ளது. மேலும் தனித்து போட்டியிடவும் அக்கட்சி தயாராகி வருகிறது.
நாசிக்,
மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் பல நேரங்களில் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருப்பதால் வருகிற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதாவுக்கு சிவசேனாவுடனான கூட்டணி மிகவும் அவசியம் என கூறப்படுகிறது. இதனால் கூட்டணியை தொடர்வதற்கு பா.ஜனதா சார்பில் சிவசேனாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாசிக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிவசேனா கட்சி தொண்டர்கள் சந்திப்பில் அடுத்துவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து வருவதாகவும், வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்னும் 15 நாட்களில் சிவசேனா வெளியிடும் எனவும் கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். மேலும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் குறித்தும் 2 மாதங்களில் தேர்வு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவுத் எம்.பி., மிலிந்த் நர்வேகர் மற்றும் ரவீந்திர மிர்லேகர் ஆகியோர் நேற்று முன்தினம் மேற்கு மராட்டிய பகுதியில் உள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 36 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர அடுத்துவரும் வாரங்களில் உத்தவ் தாக்கரே புனே, தானே மற்றும் விதர்பா பகுதிகளில் எம்.எல்.ஏ.க்களை தொடர்ச்சியாக சந்தித்து தொகுதி நிலவரம் மற்றும் வரும் தேர்தல்களில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் ஆகிய விவரங்கள் குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிகிறது.

Related Tags :
Next Story