மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணி
x
தினத்தந்தி 9 May 2018 3:30 AM IST (Updated: 8 May 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

விழுப்புரம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாவட்டங்கள்தோறும் தேர்தலின்போது பயன்படுத்துவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை குறித்து தேர்தல் துறை தெரிந்துகொள்ளும் விதமாக மாநில மற்றும் மாவட்ட தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அனுப்பும் முறையை தேர்தல் துறை தற்போது பயன்படுத்தி வருகிறது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் கணினி வரிசை எண்ணை செல்போன் செயலி மூலம் ‘ஸ்கேன்’ செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை உடனடியாக இணையதளம் மூலம் மாநில தேர்தல் துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை நேற்று காலை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் கணினி வரிசை எண்ணை செல்போன் செயலி மூலம் ‘ஸ்கேன்’ செய்து உடனுக்குடன் தேர்தல் துறைக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், தேர்தல் தனி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

Next Story