எரிவாயு நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் புதிய விலை நிர்ணயம்


எரிவாயு நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் புதிய விலை நிர்ணயம்
x
தினத்தந்தி 9 May 2018 2:00 AM IST (Updated: 9 May 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டு உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிறுவனங்கள் புதிய விலை நிர்ணயம் செய்து உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டு உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிறுவனங்கள் புதிய விலை நிர்ணயம் செய்து உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

இந்தியன் ஆயில் நிறுவனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நிறுவனங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு மே 1–ந் தேதி முதல் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.712 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.710.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.718.50 ஆகவும், கயத்தாறில் ரூ.714 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.710.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.728 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பாரத் பெட்ரோலியம்

அதே போல் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.712.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.712 எனவும் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் சிலிண்டருக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை.

இந்த அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story