திருச்சியில் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்களால் பரபரப்பு


திருச்சியில் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2018 4:30 AM IST (Updated: 9 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

அரக்கோணம் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் பயிற்சி விமானிகள் பயிற்சி பெறுவது வழக்கம். அந்த வகையில் அரக்கோணத்தில் இருந்து 6 ஹெலிகாப்டர்களில் 14 பயிற்சி விமானிகள் ராமேசுவரம் வரை பறந்து சென்று பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் அரக்கோணம் திரும்புவதற்காக புறப்பட்டு வந்தனர்.

அப்போது திருச்சி விமான நிலையம் அருகே 6 ஹெலிகாப்டர்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வானில் பறந்து வந்தது. மேலும் விமானநிலையத்தில் தரையிறங்குவதற்காக வானில் வட்டமடித்தப்படி இருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வானில் வட்டமடித்த ஒவ்வொரு ஹெலிகாப்டரும் விமானநிலையத்தில் வரிசையாக தரையிறங்கின. அப்போது விமானநிலையத்தில் எரிபொருள் நிரப்பு வதற்காக ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியது தெரியவந்தது. எரிபொருள் நிரப்பிய பின் பகல் 12 மணி அளவில் ஹெலிகாப்டர்கள் அரக்கோணம் புறப்பட்டு சென்றன. பயிற்சி விமானிகளும் அதில் பயணம் செய்தனர்.

இது குறித்து விமானநிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சி விமானிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் பயிற்சி பெறும் போது திருச்சி வழியாக சென்றால் இந்த விமானநிலையத்தில் எரிபொருள் நிரப்புவது வழக்கம் என்றனர்.

Next Story