சென்னையில் குண்டர் சட்டத்தில் 9 பேர் கைது


சென்னையில் குண்டர் சட்டத்தில் 9 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2018 3:00 AM IST (Updated: 9 May 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 9 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை, 

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் குண்டர்சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைத்து வருகிறார்கள். நேற்று 9 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். ஜான்பாஸ்கோ, கத்திகுத்து தேவராஜ், தினேஷ், ஜனா, குகன்ராஜ், முட்டை பிரகாஷ், மன்சூர்அலி, தவுபிக்அலி, ராகேஷ்சர்மா ஆகிய குற்றவாளிகள் குண்டர் சட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஜான்பாஸ்கோ, கத்திகுத்து தேவராஜ் ஆகியோர் மீது திருமங்கலம் நகைக்கடையில் திருடிய வழக்கு உள்ளது. 

Next Story