ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோவிலில் கொடை விழா பழம் எறிதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி நடந்த பழம் எறிதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கடையம்,
ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி நடந்த பழம் எறிதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் கொடை விழாநெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா மற்றும் சுடலை மாடசாமி கோவில் கொடை விழா கடந்த 1–ந் தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கும்பம் ஏற்றப்பட்டு குடியழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடைவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, 8 மணிக்கு மேல் பால்குடம், அபிஷேகம் ஆகியன நடந்தது.
பழம் எறிதல் நிகழ்ச்சிபகல் 12 மணிக்கு பட்டாணிபாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்கு கிடைத்த பழங்களை பிரசாதமாக எடுத்துச் சென்றனர். மாலை 4.30 மணிக்கு மேல் மகா அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உச்சி காலை பூஜையும், இரவு 12.30 க்கு மேல் சாமக்கொடை, ஊட்டுக்களம், அர்த்தசாம பூஜை நடந்தது.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சின்ன நம்பி பூஜை நடக்கிறது. 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 8–ம் நாள் பூஜை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் வளர்ச்சி நல கமிட்டியினர் செய்திருந்தனர்.