ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ரெயில், பஸ்களில் வந்த 250-க்கும் மேற்பட்டோர் கைது
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ரெயில், பஸ்கள் மூலம் வந்த 250-க்கும் மேற்பட்டோரை பெருங்களத்தூர், தாம்பரத்தில் போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதன்காரணமாக அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார், பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் ரெயில்கள், பஸ்களில் தொடர்சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று காலை தென்மாவட்டங்களில் இருந்து பஸ்கள் மூலம் சென்னை நோக்கி வந்த 110-க்கும் மேற்பட்டவர்களை பெருங்களத்தூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெருங்களத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
அதேபோல தாம்பரம் பகுதியில் ரெயில் மற்றும் பஸ்களில் வந்த 160-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தங்க வைத்தனர். இதனை கண்டித்து கைது செய்யப்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story