ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி,
ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 3-ம் ஆண்டு பேரவை கூட்டம் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கினார். முனியசாமி வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் தேவராஜ், மாநில பொது செயலாளர் கர்சன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். நிர்வாகிகள் ரைமண்ட் வைகுண்ட மணி, வன்னிய பெருமாள், தங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
தீர்மானம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பென்சனுக்கு பட்ஜெட்டில் பண ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாதம் 1-ம் தேதி பென்சன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். ஓய்வு பெறும் நாள் அன்றே அனைத்து பண பலன்கள் முழுவதையும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், செங்கோட்டை பொறுப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story