தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய 7 வாலிபர்கள் கைது


தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய 7 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 May 2018 3:45 AM IST (Updated: 9 May 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் ம.பொ.சி. தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்குள்ள பாலத்தின் மீது அமர்ந்து கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கிண்டல் செய்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி பழனிசாமி(வயது 43) என்பவர் தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த வாலிபர்கள் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியதாக ம.பொ.சி. தெருவை சேர்ந்த சக்திவேல்(22), பிரசாந்த்(20), விஜய்(21), ரஜினி(22), விக்னேஷ்(21), திரவியம்(22), மதன்குமார்(23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மதன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story