தமிழர்களுக்காக குரல் கொடுக்க சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க்கை அமோக வெற்றிபெற செய்யுங்கள்
கர்நாடக சட்டசபையில் தமிழர்களுக்காக குரல் கொடுக்க சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க்கை அமோக வெற்றிபெற செய்யுங்கள்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் தமிழர்களுக்காக குரல் கொடுக்க சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க்கை அமோக வெற்றிபெற செய்யுங்கள் என்று முன்னாள் கவுன்சிலரும், தமிழருமான சரவணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரோஷன் பெய்க் பிரசாரம்கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்குபவர் ரோஷன் பெய்க். தற்போது தேர்தலையொட்டி அவர் சிவாஜிநகர் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி ரோஷன் பெய்க் ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார்.
நேற்றும் அவர் வழக்கம்போல் தனது தொகுதிக்கு உட்பட்ட அல்சூர் வார்டு, எம்.வி.கார்டன், எல்லம்மன் கோவில் தெரு, ஆர்.ஆர்.மட் ரோடு, பஜார் தெரு, கார் தெரு, சத்தியநாராயணா கோவில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கவுன்சிலர் மமதா சரவணன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
‘ஹாக்ட்ரிக்’ வெற்றிக்கனிபிரசாரத்தின்போது, ‘‘காங்கிரஸ் கட்சியின் நல்லாட்சி தொடர தன்னை ஆதரிக்கும்படியும், தான் வெற்றிபெற்றால் தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும்’’ ரோஷன் பெய்க் கூறினார்.
மேலும் அவரை ஆதரித்து முன்னாள் கவுன்சிலர் சரவணா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்திலேயே சிவாஜிநகர் தொகுதியில்தான் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். தமிழர்களின் கோட்டையாக விளங்கும் சிவாஜிநகர் தொகுதியில், தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்தான் வெற்றிபெற வேண்டும். அதற்காக தொகுதி மக்கள் அனைவரும் ‘கை’ சின்னத்தில் வாக்களித்து ரோஷன் பெய்க்கை வெற்றிபெற செய்ய வேண்டும்.
ரோஷன் பெய்க் தொடர்ந்து 2 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். அவர் இத்தொகுதியில் மக்களுடன் சாதி, மத, பேதங்களை ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் பழகுகிறார். அவரது வழியில் மக்களும் ஒன்றுசேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். தொகுதியும் அமைதியாக உள்ளது. இதனால் அவரை தொடர்ந்து 3–வது முறையாக வெற்றிபெற செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கனியை தொகுதி மக்கள் அவரிடம் பரிசாக அளிக்க வேண்டும்.
அமோக வெற்றிபெற செய்ய வேண்டும்ஏன் என்றால் கர்நாடக சட்டசபையில் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் ரோஷன் பெய்க் மட்டுமே. மேலும் தமிழ்ச்சங்கத்திற்கு இடம் கொடுக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். இதில் இருந்தே தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எவ்வளவு பாடுபட்டு வருகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக தமிழர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அல்சூர் பகுதியில் வாழும் தமிழர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட முடிவு செய்துவிட்டார்கள். இதுமட்டுமல்லாமல் ரோஷன் பெய்க்கிற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. அதனால் தமிழர்களுக்காக குரல் கொடுக்க ரோஷன் பெய்க்கை நாம்(மக்கள்) அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு வாய்ப்பு
மேலும் தமிழர்களுக்கு கர்நாடக அரசியல் களத்தில் வாய்ப்பு கொடுத்து வருவது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதற்கு நானே ஒரு உதாரணம். தமிழனான என்னை கர்நாடக காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்தது. தற்போதுகூட மேயராக சம்பத்ராஜ் உள்ளார். மேலும் அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சி.வி.ராமன்நகர் தொகுதியில் களம் இறங்குகிறார்.
இப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும், உறுதுணையாகவும், வாய்ப்பு வழங்கியும் வருவது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதனால் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் கவுன்சிலர் ரோஷன் பெய்க் கூறினார்.