ஒப்பந்தப்படி கூலி வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒப்பந்தக்கூலியை வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம்,
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் சோமனூர் பகுதி விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சாமளாபுரம் அருகே கோம்பக்காடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில் துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். இதில் ஏராளமான விசைத்தறியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
இனிவரும் காலங்களில் (இனிமேல் உற்பத்தி செய்யும் துணிகளுக்கு) ஜவுளி உற்பத்தியாளர்களிடம் 2014-ம் ஆண்டு ஒப்பந்தக்கூலியை பெறுவது. ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களிடம் பிடித்தம்செய்துள்ள பணத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ஒவ்வொரு வாரமும் பாவு-நூல் இருப்பு கணக்குகளையும், சம்பள வரவு- இருப்பு கணக்குகளை எழுதி கேட்டு பெறுவது.
மத்திய-மாநில அரசு உதவியுடன் சாமளாபுரம் பகுதியில் ஜவுளிச்சந்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட சோதனையில் சோலார் மூலம் விசைத்தறிகளை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றதால் மத்திய அரசு விசைத்தறிகளுக்கு சோலார் மின் உற்பத்தி அமைக்க 50 சதவீத மானியம் அளித்துள்ளது. இந்த திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வர மாநில அரசு நெட்மீட்டர் வசதி செய்து தர வேண்டும்.
இனி வரும் காலங்களில் 2014-ம் ஆண்டு ஒப்பந்தக்கூலி வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுவது. 2014-ம் ஆண்டு ஒப்பந்தக்கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதன் காரணமாக விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. எனவே இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்தக்கூலியை குறைத்து வழங்கக்கூடாது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு எடுத்து விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், தொழிலாளர் துறை அதிகாரி களுக்கு பொதுக்குழு சார்பில் நன்றி தெரிவிப்பது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story