நடைபாதையில் தூங்கியவரின் செல்போன் திருட்டு 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போனை திரு டிவிட்டு தப்பிஓடிய 2 வாலிபர்களை ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர்.
மும்பை,
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போனை திரு டிவிட்டு தப்பிஓடிய 2 வாலிபர்களை ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர்.
செல்போன் திருட்டு
மும்பை மலாடு போலீசார் நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் லிபர்டி கார்டன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள நடைபாதையில் சந்தேகத் திற்கிடமாக 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென அந்த வாலிபர்கள் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ரோந்து போலீசார் பிடித்தனர்
இதனை கவனித்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். இதில், 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மால்வாணியை சேர்ந்த தேவேஷ் புஜ்பால்(வயது19), ஏதாஷாம் சேக்(19) என்பது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைதாகி தானே சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளனர். 7 நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியே வந்து இருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண் டுள்ளனர். மேலும் தப்பி ேயாடிய அவர்களது கூட்டா ளியையும் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story