கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்


கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 May 2018 4:37 AM IST (Updated: 9 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பால் உற்பத்தியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் பால்விலையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி பெற்று இருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என போலீசார் வலியுறுத்தினர்.

பால் உற்பத்தியாளர்கள், கலெக்டர் அலுவலகத்தின் எதிரே வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகில் ஒலிபெருக்கியுடன் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்குமாறு கோரினர். இதற்கும் போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாவட்டம் தொடங்கி 30 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒலி பெருக்கி பயன்படுத்தி தான் ஆர்ப்பாட்டங்கள் செய்து வந்ததாகவும், தற்போது அதற்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு முரணானது என கூறிய பால்உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்று விட்டனர். 

Next Story