நிதி நெருக்கடியால் பரிதாபம் மருந்துக்கடைக்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புனேயில் சம்பவம்


நிதி நெருக்கடியால் பரிதாபம் மருந்துக்கடைக்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புனேயில் சம்பவம்
x
தினத்தந்தி 9 May 2018 4:42 AM IST (Updated: 9 May 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் நிதி நெருக் கடியால் மருந்துக் கடைக்காரர் துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புனே, 

புனேயில் நிதி நெருக் கடியால் மருந்துக் கடைக்காரர் துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

புனேயில் உள்ள கோரேகாவ் பார்க், அப்மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் விஷால்(வயது42). மருந்துக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷால் இரவு 9.30 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நிதி நெருக்கடி

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் குடிபோதையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோரேகாவ் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மருந்துக்கடைக்காரர் விஷால் சமீபகாலமாக மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததாகவும், அதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Next Story