ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து வாகனங்களும் கேமராவுடன் கூடிய நவீன கருவி மூலம் கணக்கெடுப்பு
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து வாகனங்களையும் கேமராவுடன் கூடிய அதிநவீன கருவி மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதாக தெரியவந்தது.
பனைக்குளம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், சுற்றுலா மற்றும் அரசு பஸ்கள் மூலமாக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையேயான 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை, இருவழிச்சாலையாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. மேலும் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையிலான இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதை தொடர்ந்து நான்குவழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதியும் வழங்கி விட்டன. இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே உள்ள இரு வழிச்சாலையில் தினமும் செல்லும் அனைத்து வாகனங்கள் குறித்து தேசிய நெடுஞ்சாலைதுறை உத்தரவின்படி தனியார் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர் குழுவினர் கேமராவுடன் கூடிய அதி நவீன கருவி மூலம் பதிவு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன்படி ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாலையின் ஓரத்தில் கேமராவுடன்கூடிய அதிநவீன கருவியை வைத்து தொடர்ந்து 3-வது நாளான நேற்றும் வாகனங்களை மடிக்கணினி மூலம் பதிவு செய்து கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து கணக்கெடுத்து வரும் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள இருவழிச்சாலை மற்றும் நான்குவழிச்சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 2 இடத்தில் இந்த வாகன கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு, சத்திரக்குடி பகுதியில் கேமராவுடன் கூடிய கருவியை வைத்து பதிவு செய்யப்பட்டது. அதில் சராசரியாக ஒரு நாளைக்கு ராமநாதபுரத்திற்கு மட்டும் சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரம் வாகனங்கள் வந்துள்ளது கணக்கெடுப்பில் தெரிந்தது. தற்போது 2-வது கட்டமாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையிலான சாலையில் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. இதில் ராமேசுவரத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சேர்த்தால் சுமார் 5 ஆயிரத்து 500-ல் இருந்து 6 ஆயிரம் வாகனங்கள் வருவது தெரிந்துள்ளது.
இன்னும் 4 நாட்கள் இந்த பகுதியில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கும். ஏற்கனவே மதுரை-கொல்லம் இடையே ராஜபாளையம், தென்காசி வழியாக வரும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி, செங்கோட்டை பகுதியில் நடந்தது. அதில் கேரளாவுக்கு 15 ஆயிரம் வாகனங்கள் செல்வது தெரியவந்தது. இந்த கணக்கெடுப்பு இருவழிச்சாலையை, நான்குவழிச்சாலையாக மாற்றவும், நான்கு வழிச்சாலையை மேம்படுத்தும் வசதிகள் உள்ளதா என்பதை அறிய உதவியாக இருக்கும் என்றார்.

Related Tags :
Next Story