குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து லாரி மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் கைது
குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து லாரி மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்குநல்லூர், ஆரணி, மல்லியங்குப்பம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியம் மதுரவாசல், கன்னிகைபேர், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரையில் ஆங்காங்கே குழந்தையை கடத்த வந்தவர் என்று கூறி மனநலம் பாதித்த மற்றும் வாய் பேச முடியாதவர்கள் மற்றும் முதியோர்களை சில வாலிபர்கள் சுற்றிவளைத்து கண் மூடித்தனமாக தாக்கினர்.
பின்னர் அவர்களின் நிலையை தெரிந்துகொண்டு அந்த வாலிபர்கள் எதுவும் நடக்காதது போல் சென்றுவிட்டனர். மன வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை தாக்கி காயப்படுத்தாமல் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளார். மேலும், ஆட்டோவில் ஊர், ஊராக சென்று மைக் மூலம் போலீசார் பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தை சேர்ந்த லாரி மெக்கானிக் பாலு (வயது 49) என்பவர் வந்தார். இவர் தற்போது செங்குன்றம் அருகே உள்ள காந்திநகரில் தங்கியிருந்து லாரி மெக்கானிக் பணியை செய்து வருகிறார். சாமி தரிசனம் முடிந்து வயல்வெளிக்கு பாலு சென்றார். அவரிடம் அங்கு இருந்தவர்கள் விசாரித்தனர். அவர் உடனடியாக பதில் கூறவில்லை என தெரிகிறது.
இதனால் சில வாலிபர்கள் அவரை குழந்தையை கடத்த வந்தவர் என்று கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர்
தகவல் அறிந்த ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு பின்னர் அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆரணி போலீசார் பாலுவை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சின்னமபடு கிராமத்தை சேர்ந்த செக்கிலிமேடு கோபி (32), அய்யனார்மேடு பகுதியை சேர்ந்த ரஜினி (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story