ஆரல்வாய்மொழி அருகே ஜெயில் வார்டனின் மகன் விபத்தில் பலி
ஆரல்வாய்மொழி அருகே ஜெயில் வார்டனின் மகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கைநகரை சேர்ந்தவர் பிலிப். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மனைவி கிறிஸ்டி, தக்கலையில் உள்ள பெண்கள் ஜெயிலில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அருண் நிசாத் (வயது23). பிளஸ்–2 படித்துவிட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அருண் நிசாத், மோட்டார் சைக்கிளில் காவல்கிணறு–நாகர்கோவில் நால்வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் அருண் நிசாத் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அருண் நிசாத் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story