பெண்ணை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் 2 பேர் கைது
நீடாமங்கலம் அருகே பெண்ணை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர், சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும்(வயது 25) திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. கணவர் சிங்கப்பூரில் இருந்ததால் எஸ்தர் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து வீட்டில் இருந்த எஸ்தரை காணவில்லை என அவரது குடும்பத்தினரிடம் உறவினர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து மேலாளவந்தசேரி வந்த எஸ்தரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் எஸ்தர் எங்கே? என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் அவர், உங்கள் பெண் யாருடனோ ஓடிவிட்டாள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எங்களது பெண்ணை உடனடியாக எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என அங்குள்ள மாதா கோவிலில் 2 நாட்களாக எஸ்தர் குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்த ஜோசப் ராஜசேகருக்கு எஸ்தர் மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மேலாளவந்தசேரிக்கு வந்தார். பின்னர் அவர், தேவங்குடி போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர் போலீ சாரின் தீவிர விசாரணையில் பரபரப்பான தகவலை தெரிவித்தார்.
எஸ்தரை தான் கொலை செய்து உடலை வேளாங்கண்ணி கடலில் வீசி விட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து நெல்சனை நேற்று முன்தினம் அழைத்துக்கொண்டு நீடாமங்கலம் மற்றும் தேவங்குடி போலீசார் வேளாங்கண்ணி கடற்கரையில் எஸ்தர் உடலை தேடினர். அங்கு நீண்ட நேரம் தேடியும் எஸ்தரின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நெல்சன் போலீசாரிடம், எஸ்தரை கொன்று அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்குமூட்டையில் கட்டி மேலாளவந்தசேரி கிராமம் அருகே உள்ள காரிச்சாங்குடி பகுதியில் ஆற்று நாணல் புதரில் வீசியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார், நெல்சனை காரிச்சாங்குடி பகுதிக்கு அழைத்து வந்து உடலை தேடியபோது நாணல் புதரில் இருந்து 2 சாக்கு மூட்டைகளில் இருந்த எஸ்தரின் உடலை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நெல்சன்(46), மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் அதே ஊரைச்சேர்ந்த கூலி தொழிலாளி சகாயராஜ்(47) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்தரின் உறவினர்கள் கூறுகையில், சொத்துக்காக நெல்சனும், அவரது தாயாரும் சேர்ந்து எஸ்தரை கொலை செய்து விட்டதாகவும், இந்த சாவிற்கு நெல்சனின் மூத்த சகோதரர் அற்புததாஸ் உடந்தையாக இருந்ததாகவும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
கொலையின் தன்மையை பார்க்கும்போது தனி ஒருவராக இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், இதில் கூட்டு சதி இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story