திருப்பூரில் உள்ள உணவகத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் ஊழியர் பலி
திருப்பூரில் உள்ள உணவகத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் ஊழியர் இறந்தார்.
நல்லூர்,
திருப்பூர் பெரிச்சிபாளையம் வினோபாநகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி வசந்தா (வயது 60). இவர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஒரு தனியார் கல்யாண மண்டபம் அருகே உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் உணவகத்தில் உள்ள சமையல் கூடத்தில் மதிய உணவு தயார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய பாத்திரத்தில் சாம்பார் தயார்செய்யப்பட்டது. அப்போது சமையல் கூடத்திற்கு தண்ணீர் பிடிக்க வந்த வசந்தா திடீரென்று மயக்கம் அடைந்து கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்தார். இதில் அவருடைய உடல் வெந்தது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார் உடனே அருகில் உள்ளவர்கள் வசந்தாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா நேற்று இறந்தார். இது குறித்து வசந்தாவின் மகன் கார்த்திக் நல்லூர் ஊரக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் ஓட்டல் பெண் ஊழியர் விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story