கணியூரில் உள்ள பொதுத்துறை வங்கி முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கணியூரில் உள்ள பொதுத்துறை வங்கி முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கணியூர்,
கணியூரில் பொதுத்துறை வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு நேற்று 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று வங்கி வாயில் முன்பு நின்று “கடன் வழங்கு கடன் வழங்கு” என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று வங்கிக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து கணியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் வங்கிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினை குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது “குறிப்பிட்ட தனிநபர் சிலர் வங்கியில் ரூ.13 லட்சம் வரை கடன் பெற்றுக்கொண்டு இதுவரை திருப்பி செலுத்தவில்லை.
மேலும் மடத்துக்குளம், உடுமலையில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் பொதுமக்களை திரட்டி வந்து போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.
Related Tags :
Next Story