24 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


24 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

24 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை, ஆத்தூர், கடம்பங்குறிச்சி, என்.புதூர், மின்னாம்பள்ளிபஞ்சமாதேவி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பிலான சாலைபணிகள், அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்தார்.

இந்த பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராய புரம் சட்டடமன்ற உறுப்பினர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், தாசில்தார் (மண்மங்கலம்) கற்பகம், மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமல கண்ணன், நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் கரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.திருவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தையல் எந்திரங்கள்

அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசும்போது, கரூர் மாவட்டம் நெசவு தொழிலில் சிறப்பிடம் வகிக்கும் மாவட்டமாக திகழ்வதால் தையல் எந்திரங்கள் வழங்கப்படுகிறது. இது அவர்களது வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும். திருமண நிதியுதவியாக இதுவரை 11 ஆயிரத்து 653 பெண்களுக்கு ரூ.13 கோடியே 4 லட்சம் மதிப்பில் 46.61 கிலோகிராம் தங்கமும், ரூ.40 கோடியே 93 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அனைத்து ஏழை பெண்களும் பெற்று பயனடைய வேண்டும் என்று கூறினார். இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் வள்ளியம்மை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story