மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தகவல்


மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 10 May 2018 2:36 AM IST (Updated: 10 May 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி முன்னிலை வகித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

ரூ.100 கோடி இலக்கு

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 30 கிளைகளை கொண்டு ரூ.680 கோடிக்கு முதலீடு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வரை வரவு-செலவு நடைபெற்று வருகிறது.

இந்த வங்கி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க தயாராக உள்ளது. மகளிருக்கு குழு கடனாக ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து தயாராக உள்ளோம். கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறலாம். மகளிர் குழுக்கடனாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதவிர மிக குறைந்த வட்டியில் மகளிர் சிறு வணிக கடன் ரூ.25 ஆயிரம் வரை உடனடியாக கடன் வழங்கி வருகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை வளமாக்கி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, உதவி திட்ட இயக்குனர் ராமர் ஆகியோர் பேசினர். நெல்லை சரக துணைப்பதிவாளர் தொண்டிராஜ், சேரன்மாதேவி சரக துணைப்பதிவாளர் வளர்மதி, தென்காசி சரக துணை பதிவாளர் ராஜன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் வில்சன், மகாராஜன், உதவி பொது மேலாளர் நயினார், கள மேலாளர்கள் முருகராஜ், திரவியக்குமார், குழலாமணி, சங்கரவேலு, செல்வகுமார், செந்தில்வேல், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி உதவி பொது மேலாளர் முத்துசெல்வம் நன்றி கூறினார்.

Next Story