நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 2:42 AM IST (Updated: 10 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

நெல்லையில் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பில் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த, முந்தைய ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கு பிறகு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித முன்னேற்றமும் காண முன்வராத மத்திய அரசை கண்டித்தும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் நேற்று அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரெங்கன் தலைமை தாங்கினார். இதில் வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பாலமுருகன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ராம்நாத், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் முருகன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பலவேசம் ஆகியோர் பேசினர்.

கோஷங்கள்

இதில் வாராக்கடன்கள் மூலம் வங்கியை ஏமாற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களை பாதிக்கும் வங்கி சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும். ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story