காதல் ஜோடி திருமணம் எதிரொலி: மணமகன்-மணமகள் வீடுகளுக்கு தீ வைப்பு


காதல் ஜோடி திருமணம் எதிரொலி: மணமகன்-மணமகள் வீடுகளுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே காதல் ஜோடிகள் வெளியூருக்கு சென்று திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட மோதலில் மணமகன் மற்றும் மணமகள் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவருடைய மகன் செல்வநாதன் (வயது23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகள் பாதம்பிரியாள்(18) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில தினங் களுக்கு முன் செல்வநாதனும், பாதம்பிரியாளும் ஒரே நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் இவர்கள் இரு குடும்பத்தினரிடையே மோதல் வெடித்தது. இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி இரவு செல்வநாதன் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் நேற்று காலை பரமசிவத்தின் வீட்டை செல்வநாதனின் உறவினர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்த தகவல்களை அறிந்த காதல் ஜோடிகள் நேற்று மதியம் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வநாதன் மற்றும் பாதம்பிரியாள் ஆகிய இருவரையும் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செங்கமலக்கண்ணன், பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர்

தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்ப

Next Story