லாரி மீது சொகுசு கார் மோதல்; தாத்தா-பேத்தி உள்பட 3 பேர் பலி
ஓசூரில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் தாத்தா-பேத்தி உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஓசூர்,
சென்னையை அடுத்த கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). அணுமின் நிலைய அதிகாரி. இவரது மனைவி லலிதா (50). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு சுவாதிஸ்ரீ (24) என்ற மகள் உள்ளார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சீனிவாசன் (28) என்பவருக்கும் திருமணமானது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு இந்திரா நகரில் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரசவத்திற்காக கல்பாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்கு சுவாதிஸ்ரீ சென்றார். அங்கு 4 மாதங்களுக்கு முன்பு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மகள் சுவாதிஸ்ரீ, பேத்தி 4 மாத குழந்தை யஷஸ்வி ஆகியோரை அழைத்துக்கொண்டு சீனிவாசன், அவரது மனைவி லலிதா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு சொகுசு காரில் புறப்பட்டனர். அந்த காரை கல்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (50) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி பக்கமாக ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது சுரேஷ்குமார் ஓட்டி சென்ற சொகுசு கார் பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
இந்த கோர விபத்தில் டிரைவர் சுரேஷ்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை யஷஸ்வி, அவரது தாய் சுவாதிஸ்ரீ, பாட்டி லலிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை யஷஸ்வி பரிதாபமாக உயிரிழந்தது. லலிதாவுக்கும், சுவாதிஸ்ரீக்கும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் விபத்துக்குள்ளான லாரி, காரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். போலீசாரின் விசாரணையில் டிரைவர் சுரேஷ்குமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஆங்காங்கே நிறுத்தப்படும் லாரிகள்
ஓசூரில் ஜூஜூவாடியில் தமிழக - கர்நாடக மாநில எல்லையில் சோதனை சாவடிகள் உள்ளன. இங்குள்ள வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் இந்த சோதனை சாவடியில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் சாலையில் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி செல்கிறார்கள். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் லாரி நிறுத்தப்பட்டதாலேயே இந்த விபத்து நடந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story