மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2018 3:45 AM IST (Updated: 10 May 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி சிறுமி உயிரிழந்தாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பர்கூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிமலர்குமார் (வயது 38). இவரது மகள் தர்ஷினி (5). சம்பவத்தன்று ரவிமலர்குமார் காரில் தனது மகளுடன் கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற ரவிமலர்குமார், அவரது மகள் தர்ஷினி மற்றும் மோட்டார்சைக்கிளில் சென்ற வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (36) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

சிறுமி பலி

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை தர்ஷினி பரிதாபமாக இறந்தாள். கோவிந்தராஜூம், ரவிமலர்குமாரும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story