பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் சாவு


பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் சாவு
x
தினத்தந்தி 10 May 2018 3:43 AM IST (Updated: 10 May 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக மப்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக வந்த அவர் பழனியின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

சாவு

இதில் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்து போனார். லேசான காயம் அடைந்த சுகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story