மணல் கடத்தல்; 9 பேர் கைது


மணல் கடத்தல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 4:06 AM IST (Updated: 10 May 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அடுத்த அங்கம்பாக்கம் பாலாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனுக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் விரைந்தார். அப்போது அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி வாலாஜாபாத் தாலுகா அங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜி (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் வாலாஜாபாத்தை அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக வாலாஜாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு புகார்கள் வந்தது. அதையடுத்து அவர் போலீசாருடன் அங்கு விரைந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணலை மூட்டையாக கட்டி கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி கருக்குப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெருமாள்(23), நவீன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனூர் பகுதி பாலாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியில் மணல் ஏற்றி வருவது தெரியவந்தது. ஆய்வில் அந்த லாரியில் மணல் கடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக மதுராந்தகம் தாலுகா பழையனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் (34) மற்றும் அதே தாலுகா மையூர் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் (43) ஆகியோரை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Next Story